தூங்கப் போகும் போது சரியாகப் படுத்துக் கொள்வது எப்படி ? ஒருக்களித்து படுங்கள். தலை, கழுத்துக்கு ஆதரவாக தலையணை வையுங்கள். கால் முட்டுகளுக்கு நடுவிலும் தலையணை வைத்துக் கொள்ளலாம்
படுக்கிற மெத்தை, இடம் அதன் கடினம் மிக முக்கியம். ரொம்ப மென்மையான மெத்தையும், ரொம்ப உறுதியான மெத்தையும் சரியானவை அல்ல. உங்களுக்கு ஏற்ற கடின/மெது மெத்தையை கண்டு பிடியுங்கள்.
கீழ் முதுகு வலித்தால் இதை செய்யுங்கள். சரியான விதத்தில் கீழ் முதுகுக்கு ஆதரவு கொடுங்கள், படங்கள் கீழே
நிற்கையில் முதுகை எப்படி வைத்துக் கொள்ளவது ? முதுகை வளைக்காதியுங்கள்
முதுகுக்கான உடற்பயிற்சி
ஹீல்ஸ் செருப்புகள் வேண்டாம், உடற்பயிற்சி செய்யுங்கள்
எப்படி மல்லாந்து படுக்க வேண்டும்? கால் முட்டிக்குக் கீழே தலையணையும், கீழ் முதுகுக்கு கீழே மெல்லிய தலையணையும் வைக்கலாம்.
எப்படி உட்கார வேண்டும்?
கால் பாதம் தரையில் நன்கு பதிய வேண்டும் கீழ் முதுகு நன்கு தாங்கப் பட்டிருக்க வேண்டும் தோள்கள் ரிலாக்சாக தாழ்ந்து இருக்க வேண்டும் கை மணிக்கட்டு நேராக இருக்க வேண்டும்
வேறென்ன செய்யலாம் நிவாரனதிற்கு? வெந்நீர் ஒத்தடம் அல்லது மசாஜ்
முதுகு வலி வராமல் தடுப்பது எப்படி?
எப்படி வருகிறது இந்த வலி? முதுகு எலும்பு கணுக்களை இணைக்கிற ஜவ்வு அடிபடும் போது அல்லது ஒரு கணு கொஞ்சம் நகர்ந்து முதுகு தண்டை அழுத்தும் போது
எப்படி தடுக்கலாம் ? ௧) இழுப்பதை விட கனமான எடையை தள்ளி செல்லுங்கள் ௨) ஒரே இடத்தில் வெகு நேரம் இருக்காமல் எழுந்து சிறிது நேரம் நடங்கள் அல்லது நெளித்து கொடுங்கள்
டாக்டரை உடனே பார்க்க வேண்டியது எப்பண்ணா: முட்டிக்கு கீழ வலி பரவும் போது இடுப்புக்கு கீழ மரத்துப் போகும் போது கழிப்பதில் உங்கள் கண்ட்ரோல் இல்லாமல் போனால் வலி இரண்டு மூன்று நாள்களுக்கு மேல இருந்தால் தாங்க முடியாத வலி இருக்கும் போது அடி பட்டு இந்த வலி வந்து இருந்தால்
எடையுள்ள பொருள்கள தூக்கும் போது முதுகில பிடிக்காம தூக்கணும். இடது பக்கம் உள்ளது தவறான முறை வலது பக்கம் சரியான முறை
தகவல் உதவி : கவிதா ஆறுமுகம் |
No comments:
Post a Comment