இந்த இப்மேன் தான் புரூஸ் லீ-க்கு குங்-பூ சொல்லிக் கொடுத்த குரு. அவரோட வாழ்க்கைக் கதை தான் இந்தப் படம்.
இப் மேன் கிராமத்தில பெரிய குங்பூ மாஸ்டர், பெரிய பணக்காரன். அந்த கிராமத்த ஜப்பான் ராணுவம் புடிசுக்குது 2-ம் உலக போர் சமயம். இப்மேன் வீட்ட எடுத்துக்கறாங்க. வீடில்லாத பணம் இல்லாம இவர் குடும்பம் கஷ்டப் படுது. ஜப்பான் ராணுவ அதிகாரி கராத்தே பிரியர். சண்டை தெரிஞ்சவங்க கூட அவர் சண்டை நிகழ்சிகள் நடத்தறார் - சைனா காரங்க ஜெயிச்சா அவங்களுக்கு அரிசி (சாப்பாட்டுக்கு) கொடுக்கறாங்க. அதுக்காக நிறைய பேரு வர்றாங்க. இப் மேன் கரி அள்ளிப் போடற வேலை செஞ்சு அரை வயறு சாப்பட்டாலும் சண்டைக்கு போக மறுக்கறாரு.
அவரோட சொந்தக் காரப் பையன் அந்த சண்டைல இறந்திடறான். அது தெரியாம அவன தேடி அங்கப் போறாரு, சண்டை போடற சூழ்நிலை வருது. அவங்க ஆச்சர்யப் பட மாதிரி சண்டை போட்டு அவங்கள ஜெயிக்கராறு. ஜப்பான் காரங்களுக்கு இது பிடிக்கல. இவர அடக்கரதுக்காக சில பெரிய தப்புகள் செய்திடறாங்க ராணுவ அதிகாரிக்கு அடுத்த இடத்தில இருக்கறவர்.
இப் மேன் ஜப்பான் அதிகாரிக்கு ஒரு சேலஞ் வைக்கறாரு: ரெண்டு பெரும் நேருக்கு நேர் மோதனும்னு. ஜப்பான் அதிகாரி நல்லவர் தான் அவர் ஒதுக்கறார். இரண்டாம் நிலை அதிகாரி இப் மேன மிரட்டறார். சண்டை நடக்குது, இப் மேன் ராணுவ அதிகாரிய அடிச்சு போட்டிடறார். அது பிடிக்காம இரண்டாம் நிலை அதிகாரி இப் மேன துப்பாக்கியால சுட்டிடறார். குண்டு அடி பட்ட இப் மேன் தப்பிச்சு ஹான்க் காங் போய்டறார். படம் முடியுது.
படத்தில வசனங்கள் எல்லாம் சைனீஸ் மொழியில இருக்கு..எதுவும் புரியல. சப்-டைட்டில் பாத்து புரிஞ்சுக்க வேண்டியது இருக்கு.
No comments:
Post a Comment