Memories

Saturday, December 31, 2011

2011 - சில தகவல்கள்

2011 வது வருடத்தில் இன்டர்நெட்டில் அதிக அளவு பார்க்கப் பட்ட வீடியோ இதோ:
கொலைவெறி டி பாட்டு


 
இதற்கு போட்டியாக நம்ம சிம்பு ஒரு பாட்டை வெளியிட்டு இருக்கிறார் என்றும் ஒரு தகவல்.

பிரமு நினைவு நூலகம் !!

இந்த இனிய புத்தாண்டு பிறக்கும் நன்னாளில் நெஞ்சம் நிறைந்த சந்தோஷத்தோடு இந்த அறிவிப்பு செய்யப் படுகிறது. பிரமு மாமா பெயரில் நினைவு  நூலகம் 2012 ஜனவரி முதல் தேதியில் திறக்கப் படுகிறது.


முன் நின்று இதை செயல்படுத்திய சாதனையாளரான முருகா சித்தப்பாவுக்கு பிரமு இணையத்தின் நெஞ்சார்ந்த நன்றிகள் பல கோடி !!


-- இந்த நூலகம் கால காலமாய் பிரமு பெயரை சொல்லுமாறு நிற்கும் என்று வணங்கி வாழ்த்தும் இளைய உள்ளங்கள் 

இனிய 2012 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!







பிரமு மாமாவின் ஆசீர்வாதத்தோடு இந்த 2012 ஆம் வருடம் இனிய வளமான ஆண்டாக மலர வாழ்த்துகிறோம் !! 

Friday, December 30, 2011

5 மெகா பைட் ஹார்ட் டிரைவ் (1956) IBM நிறுவனத்திற்காக

 

1956 -ஆம் வருடம் IBM நிறுவன சூப்பர் கம்ப்யூட்டர்-க்காக செய்யப் பட்ட 5 மெகா பைட் ஹார்ட் டிரைவ் விமானத்தில் இருந்து இறக்கப் படுகிறது..
5MB தான் இது எவ்ளோ பெர்ர்ருசு......  இப்போ இத விட 200 மடங்கு அளவு உள்ளது குட்டியா ஒரு பெட்டியா, பெட்டி கடைல கிடைக்குது, நிறைய பேரு வச்சுருக்காங்க.... 
  

Monday, December 26, 2011

சமீபத்தில் பார்த்த சைனீஸ் படம் - இப்மேன் (ஆங்கில சப் டைட்டிலுடன் பார்த்தது)


இந்த இப்மேன் தான் புரூஸ் லீ-க்கு குங்-பூ சொல்லிக் கொடுத்த குரு. அவரோட வாழ்க்கைக் கதை தான் இந்தப் படம்.




இப் மேன் கிராமத்தில பெரிய குங்பூ மாஸ்டர், பெரிய பணக்காரன். அந்த கிராமத்த ஜப்பான் ராணுவம் புடிசுக்குது 2-ம் உலக போர் சமயம். இப்மேன் வீட்ட எடுத்துக்கறாங்க. வீடில்லாத பணம் இல்லாம இவர் குடும்பம்  கஷ்டப் படுது.  ஜப்பான் ராணுவ அதிகாரி கராத்தே பிரியர்.  சண்டை தெரிஞ்சவங்க கூட அவர் சண்டை நிகழ்சிகள் நடத்தறார் - சைனா காரங்க ஜெயிச்சா அவங்களுக்கு அரிசி (சாப்பாட்டுக்கு) கொடுக்கறாங்க. அதுக்காக நிறைய பேரு வர்றாங்க.  இப் மேன் கரி அள்ளிப் போடற வேலை செஞ்சு அரை வயறு சாப்பட்டாலும் சண்டைக்கு போக மறுக்கறாரு. 
அவரோட சொந்தக் காரப் பையன் அந்த சண்டைல இறந்திடறான். அது தெரியாம அவன தேடி அங்கப் போறாரு, சண்டை போடற சூழ்நிலை வருது. அவங்க ஆச்சர்யப் பட மாதிரி சண்டை போட்டு அவங்கள ஜெயிக்கராறு. ஜப்பான் காரங்களுக்கு இது பிடிக்கல. இவர அடக்கரதுக்காக சில பெரிய தப்புகள் செய்திடறாங்க ராணுவ அதிகாரிக்கு அடுத்த இடத்தில இருக்கறவர். 
இப் மேன் ஜப்பான் அதிகாரிக்கு ஒரு சேலஞ் வைக்கறாரு: ரெண்டு பெரும் நேருக்கு நேர் மோதனும்னு. ஜப்பான் அதிகாரி நல்லவர் தான் அவர் ஒதுக்கறார்.  இரண்டாம் நிலை அதிகாரி இப் மேன மிரட்டறார். சண்டை நடக்குது, இப் மேன் ராணுவ அதிகாரிய அடிச்சு போட்டிடறார். அது பிடிக்காம இரண்டாம் நிலை அதிகாரி இப் மேன துப்பாக்கியால சுட்டிடறார். குண்டு அடி பட்ட இப் மேன் தப்பிச்சு ஹான்க் காங் போய்டறார். படம் முடியுது.
படத்தில வசனங்கள் எல்லாம் சைனீஸ் மொழியில இருக்கு..எதுவும் புரியல. சப்-டைட்டில் பாத்து புரிஞ்சுக்க வேண்டியது இருக்கு. 


சமீபத்தில் பார்த்த ஆங்கிலப் படம் - மெமண்டோ (Memento)


கஜினி படத்துக்கு ஐடியா இந்த படத்தில இருந்து தான் சுட்டாங்க. நம்ம கதாநாயகனுக்கு  15 நிமிஷம் மட்டும் தான் நியாபகம் இருக்கும். உடம்பு முழுக்க பச்சை குத்தி இருக்கான், அவனுக்கு மறக்க கூடாத விஷயங்கள. பாக்கற எல்லாரையும் போட்டோ எடுத்து வச்சுக்ரான். போட்டோ பின்னால சில குறிப்புகள் எழுதியும் வச்சி இருக்கான், நினைவு படுத்திகரதுக்காக.
படமும்  15 நிமிஷம் கொண்ட பகுதிகளா நகருது. கதைய வித்தியாசமா சொல்றாங்க. கடைசி நடக்கறது தான் முதல்ல வருது (அதாவது கிளைமாக்ஸ் முதல்ல). அதுக்கு முன்னாடி நடந்தது அப்பறம் வருது. இப்படி சொல்லலாம்: கிளைமாக்ஸ்-ல வில்லன் சாகறான். அப்பறம் வர்ற காட்சியில அவன் ஹீரோ கிட்ட வாக்குவாதம் செய்யறான். அப்பறம் வர்ற காட்சியில அவன் ஹீரோவ பாக்கறான் - இப்படி. நேரடியா காட்றதா இருந்தா முதல்ல ஹீரோ வில்லன் பாத்துக்குவாங்க, அப்பறமா பேசுவாங்க அப்பறம் வில்லன் அடி வாங்குவான். எப்படித் தான் இப்படியெல்லாம் (ரூம் போட்டு ?!) யோசிக்கறாங்களோ ஹாலிவூட்லே !

கதைல இன்னொரு பகுதி கருப்பு வெள்ளை காட்சிகளா வருது. இந்த கருப்பு வெள்ளை பகுதியில கதாநாயகன் யார் கிட்டயோ போன்லே பேசறான். தன் வாழ்கையில அவனுக்கு நியாபகம் இருக்கற நிகழ்ச்சி பத்தி பேசறான். பின்னோக்கி போற காட்சிகளும் முன்னோக்கி போற கருப்பு  வெள்ளை காட்சிகளும் கடைசியிலே சந்திக்குது, படமும் முடியுது. டைரக்டர் எப்படியம் நம்மள ரெண்டு வாட்டி பாக்க வச்சிடுவார், அப்பத்தான் புரியும் நமக்கு.

முன்னோக்கி பின்னோக்கி அப்படீன்னு சொல்லாம கதைய சாதாரணமா சொல்றேன் இங்கே. ஹீரோ கிட்ட ஒரு போலீஸ் காரன் போன்லே பேசறான். ஹீரோ அவன் வாழ்க்கையிலே நடந்த ஒரு நிகழ்ச்சிய சொல்லறான். ஹீரோ அப்ப கார் இன்சூரன்ஸ் கம்பனிலே வேல பாக்கறான். ஒரு கார் ஆக்சீடன்ட்ல ஒருத்தனுக்கு நியாபகம் மறதி வந்திடுச்சி (15 நிமிஷத்துக்கு அப்பறம் எல்லாமே மறந்திரும்), இத சரி பண்றதுக்கு மருந்து செலவ இன்சூரன்ஸ் கம்பெனி எதுக்கலாமா வேண்டாமா-ன்னு முடிவு பண்றதுக்கு நம்ம ஹீரோவ அனுப்புது. அவனும் பாத்திட்டு உடலுக்கு கோளாறுன்னா கம்பனி ஏத்துக்கும் இவருக்கு மனசு கோளாறு அதனால செலவ எதுக்க முடியாதுன்னு சொல்லிடறான். செலவுகள் பொறுக்க முடியாமலும் இவனுடைய மறதி பிரச்னை தாங்க முடியாம அவ தற்கொலை செஞ்சுக்கரா.

அந்த போலீஸ் காரன் ஹீரோவ நேரடிய வந்து பாக்கறான். ஹீரோ அவன் மனைவிய கொலை செஞ்ச ஒருத்தன தேடிட்டு இருக்கான், அவன் பேரு ஜான் அப்படீங்கறது மட்டும் தான் ஹீரோக்கு தெரியும், மற்றபடி எதுவும் தெரியாது. போலீஸ் காரன் வந்து ஜான் யாருங்கரதையும், அவன் இருக்கற இடத்தயும் கண்டு பிடிசுட்டதாவும் சொல்லறான். சொல்லீட்டு ஹீரோவ அனுப்பி வைக்கறான். அங்க போனா ஜான் இவன தெரிஞ்ச மாதிரி பேசறான். ஹீரோவுக்கு ஆத்திரம் வருது, அவன அடிச்சி சாகடிக்கறான். அடிக்கும் போது அந்த ஜான் தன் காரையும், அதில இருக்கற பணத்தையும் எடுத்துக்க சொல்லிட்டு அவன விட்டுற சொல்லறான். இவனோட கோட் சூட் எல்லாம் ஹீரோ எட்துகிட்டு அவன நல்லா அடிச்சிடறான்.  அடி நல்லா பட்டு அவன் சாகர அளவுக்கு போயிடறான். சாகும்போது ஹீரோ போலீஸ் காரன்கிட்ட சொன்ன கதைல வர்ற ஆளு பேர முனங்கறான். இறந்தவனோட டிரெஸ்ஸ போட்டுக்கறான். அவன் கார எடுத்துக்கறான். நம்ம ஹீரோ-க்கு சந்தேகம் வருது, அந்த கதைய நல்லா பழகுரவங்களுக்கு மட்டும் தான் சொல்வான் ஹீரோ. அப்படீன்னா இவன் ஜான் இல்ல.

இந்த சமயத்திலே போலீஸ் வர்றான், அவன் மேல ஹீரோக்கு ரொம்ப சந்தேகம் வருது. அவன் சொல்லற பொய்கள நம்பக் கூடாதுன்னு அவன் போட்டோ பின்னால எழுதி வைக்கறான். அவனோட கார் பிளேட் நம்பரையும் எழுதி வைக்கறான்.  ஒரு பச்சை குத்தற இடத்துக்குப் பொய் அந்த நம்பெர பச்சயா குத்திக்கறான். இவன் போட்டிருக்கற கோட் பாக்கட்லே  ஒரு அட்ரசும், நம்பரும்  இருக்கு. அங்க போறான், ஒரு லேடியா மீட் பண்றான். காரையும் கோட்டையும் பாத்து அவளுக்கு சந்தேகம் வருது, அவ இறந்து போன ஆளோட கேர்ள்-பிரன்ட். அவ திறமையா ஒரு விஷயத்த கண்டு பிடிசிக்கறா.  இவன யாரோ பயன் படுத்திருக்காங்க. அவ இவன் எழுதி வச்சு இருக்கற நம்பர் ப்ளேட் வச்சு அந்த போலீஸ் காரன் போட்டோ பேரு கண்டு பிடிச்சு கொடுக்கறா. அதிலே அவன் பேரு ஜான் அப்படீன்னு வருது. அவன கூட்டிட்டு போறதுக்கு ஒரு இடத்தையும் சொல்லறா. அந்த இடம் அவளோட பாய்-பிரான்ட் இறந்த இடம்.

நம்ம ஹீரோ இந்த போலீஸ் காரன அந்த இடத்துக்கு கூட்டிட்டுப் போய் சாகடிக்கறான்.  அதோட கதை முடியுது.  படம் எப்படி தொடங்குதுன்னா போலீஸ் காரன் சாகரதில தொடங்குது. ஹீரோ போன்-லே பேசறான். இறந்து போன போலீஸ் காரன் ஹீரோவ தேடி வர்றான்.  ஒரு பொண்ணு இவன் கிட்ட போட்டோ பேரு எழுதின பேப்பர கொடுக்கறா, அதுலே போலீஸ் காரன் போட்டோ இருக்கு அவன் பேரு ஜான் அப்படீன்னு இருக்கு. அவ யாருங்கறது ஹீரோக்கு தெரியல. அதே பொண்ணு கிட்ட ஹீரோ பேசிட்டு இருக்கான், அவன் மனைவிய பத்தி சொல்லிட்டு இருக்கான். அவல கொன்னவன் பேரு ஜான் அப்படீன்னு சொல்லறான். கோட் பாக்கட்ல இருந்து ஒரு பொண்ணு பேரு, அட்ரஸ் எடுக்கறான். அந்த பொண்ண போய் பாக்கறான் (இவன் மனைவி பத்தி சொல்லிட்டு இருந்த அதே பொண்ணு). ஹீரோ ஒரு  பாழடஞ்ச கட்டடத்தில இருந்து வெளிய வர்றான், போலீஸ் காரன் அங்க வர்றான், அவன் மேல சந்தேக பட்டு அவன் கார் நம்பர் ப்ளேட் நம்பர எழுதிக்கறான். பச்சை குத்தற இடத்துக்கு போறான். பாழடஞ்ச இடத்தில ஒருத்தன அடிச்சு போடறான்.

Sunday, December 25, 2011

Happy Birthday, Dhanam !

தங்கை தனத்துக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !!

- பிரமு இணையம் (Piramu)

சமீபத்தில் பார்த்த ஹாலிவூட் படம் - டின்டின்



டின்டின் ஒரு பதினாலு பதினைந்து வயது சிறுவன், வீர சாகசங்களின் மேல் தீராத ஆர்வம் உடையவன்.  ஜுராசிக் பார்க் படம் டைரக்ட் பண்ணின ஸ்டீபேன் ஸ்பீல்பர்க் எடுத்து இருக்கார். உலகம் முழுக்க முன்னாடியே ரிலீஸ் ஆய்ட்டாலும், அமெரிக்கால இப்ப தான் ரிலீஸ் ஆகுது. IMAX தியேட்டர்ல 3D ல பாக்கும் போது ரொம்ப நல்லாவே இருக்கு. 



2011 - சில தருணங்கள்

2011 ஒரு மறக்க முடியாத ஆண்டு. 

இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பை ஜெயித்த போதுள்ள சில சந்தோஷ தருணங்கள் 












Thursday, December 22, 2011

இண்டர்நெட்டை கலக்கும்(?) சேதி 1

 2012-இல் வரவிருக்கும் பேட் மேன்  படம்.


"The legend ends"  என்று கொடுத்திருப்பதை வைத்து இத்துடன் பேட் மேன் காலி என்கிறார்கள். பொறுத்திருந்து பார்போம்

இனிய கிருத்துமஸ் நல்வாழ்த்துக்கள் !




இணையத்தின் வாசகர்கள் அனைவருக்கும் பிரமு மாமா சார்பில் இனிய கிருத்துமஸ் நல்வாழ்த்துக்கள் !

விண்வெளி அதிசயம்

 லவ்ஜாய் என்கிற வால் நட்சத்திரம் (தூமகேது என்பது அந்த கால வழக்கு) சூரியனை நோக்கிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது டிசம்பர் 15 ஆம் தேதி.  சூரியனை நெருங்கும் போதே பஸ்பமாகி விடும் என்று எண்ணினார்கள் அறிவியல் வல்லுனர்கள். வால் நட்சத்திரத்தின் பாதையை கணக்கிட்டு பார்க்கும்போது சூரியனுக்கு அருகில் சென்று அதை சுற்றி செல்லும் (எரிந்து போகாது இருந்தால்) என்று தெரிந்தது. ஒரு சஸ்பென்ஸ் படத்தை பார்ப்பது போல பல வானியல் வல்லுனர்கள் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள் .


மேற்கண்ட படத்தில் நடுவில் உள்ள நீல நிற தட்டின் நடுவே உள்ள வெள்ளை வட்டம் தான் சூரியன். அதன் வெப்பம் மிகுந்த வெளிச்சமான  பகுதி தான்  நீல நிறமாக்கப் பட்டு காண்பிக்கப் படுகிறது. அந்த வெளிச்ச தட்டை நோக்கி பாய்ந்து செல்பவர் தான் நம்ம லவ்ஜாய் வால் நட்சத்திரம். நீங்கள் நினைப்பது சரி தான் - நீளமாக தெரிவது அதன் வாலே தான்.

லவ்ஜய் பிழைக்குமா இல்லையா என்று நமக்கும் ஆர்வம் தோன்றுவது இயல்பே...சரி என்ன ஆச்சு ?

எல்லா தொலை நோக்கிகளும் லவ்ஜாய் மேல் கண்களை பதித்து இருந்தன. லவ்ஜாய் சூரியனை நெருங்குவது வரை பார்க்கமுடிந்தது ஆனால் அடுத்து என்ன நடந்தது என்பது சில நிமிடங்கள் பெரிய சஸ்பென்ஸ் தான். சூரியனின் பின் பக்கத்தில் இருந்து சின்ன வெளிச்ச போட்டு ஒன்று பறந்து செல்வதை பார்த்த போது எல்லாருக்கும் பெரிய ஆச்சர்யம் ... லவ்ஜாய் பிழைத்துக் கொண்டது என்று.


அவ்வளவு பக்கத்தில் சூரியனை நெருங்கியதால் லவ்ஜாயின் வால் அறுபட்டு போனது...அறுபட்ட வால் சூரியனுக்கு ஒரு பக்கமும் தலை இன்னொரு பக்கமும் வந்தது.



ஆனாலும் லவ்ஜாய் அதிர்ஷ்டக் கார வால் (இல்லாத) நட்சத்திரம் தான்..!

பின் குறிப்பு: நம்முடைய முன்னோர்கள் இந்த சூழ்நிலையில் சூரிய பகவானுக்கும் எதாவது பாம்பு அரக்கனுக்கும் சண்டை என்றும் தலையும் வாலும் பிரிந்தன என்றும் கதை எழுதி இருப்பார்கள் இந்நேரம்.



Tuesday, December 20, 2011

இது புதுசு...


செய்தி: போயேஸ் தோட்டத்தில் இருந்து மன்னார்குடி கும்பல் வெளியேற்றம். கட்சியில் இருந்து நீக்கம்.

எங்கேயோ படிச்சது: "இது சனி பெயர்ச்சி இல்ல, மன்னார்குடி பெயர்ச்சி"

கருத்துக்களை எழுதுங்க. 

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 9, 10







பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு  
பெரிய குழப்பத்தோடையும் கலக்கத்தோடையும் வந்தியத்தேவன் படுத்திருந்தான் எப்ப தூங்கினான்னு தெரியல. யாரோ தட்டி எழுப்பினாங்க. அது கந்தமாறன் தான். விடிஞ்சு ரொம்ப நேரம் ஆயிரிச்சின்னு சொன்னான் அவன். வந்தியத்தேவன் கிளம்பனும்னு சொன்னான், கந்தமாறன் விடல. ஏதேதோ பொய் காரணம் சொல்லிட்டு கிளம்பிட்டான். ரெண்டு பெரும் வெட்டிக் கதை பேசிட்டே வந்தாங்க. அப்போ கந்தமாறன் முந்தின நாள் நடந்த விஷயங்கள்ல இருந்து நெறைய பேசினான்: போர் வரும்னான், ஈழத்தில நக்கர சண்டைல தப்புகள் இருக்கறதா சொன்னான்.  கொள்ளிடக் கரைக்கு வந்து சேந்தாங்க ரெண்டு பேரும். அங்க படகில வந்தியத் தேவன ஏத்தி விட்டுட்டு அந்தக் கரைல அவனுக்கு குதிரை ஏற்பாடு செஞ்சு கொடுக்க வேலையாள் ஒருத்தனையும் அனுப்பினான் கந்தமாறன். படகு கிளம்பற நேரத்திலே படக நிறுத்த சொல்லி கூவிட்டே வந்து கடைசி நேரத்துல ஏறினான் ஒருத்தன், அது ஆழ்வார்க்கடியான்.   



அத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்  
அரசிளங் குமரிகள் குந்தவை நாச்சியார் & வானதி ரெண்டு பேரும் குடந்தை சோதிடர பாக்க வர்றாங்க. குந்தவை நாச்சியார் சோழ சக்கரவர்த்தியோட மகள். அவள இளைய பிராட்டி அப்படீன்னும் மக்கள் அன்பா கூப்பிடுவாங்க. இவளுக்கு நேர அடுத்த தம்பி அருண்மொழிவர்மன், அவன் மேல ரொம்ப பாசம் அக்காக்கு.
வானதி கொடும்பாளூர் குறுநில மன்னரோட மகள், அருண்மொழி மேல அதீத  காதல் இவளுக்கு. ரொம்ப அன்பும் அடக்கமும் உள்ளவ. கொஞ்ச நாளா விளையாட்டும் பேச்சும் இல்லாம சோர்ந்து பொய் இருக்கறா. அதுக்கு காரணம் என்னான்னு தெரிஞ்சுக்க ரெண்டு பேரும் குடந்தை சோதிடர் முன்னால இருக்கறாங்க, சோதிடர் வானதியோட சாதகத்த பாக்கறாரு. 



Friday, December 16, 2011

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 8

பாகம் 1  - புது வெள்ளம்
அத்தியாயம் 8 - பல்லக்கில் யார் ?  

சுருக்கம்:  இளவரசர்கள்ள மூத்தவரான மதுராந்தகத் தேவருக்குத் தான் பட்டம் கொடுக்கணும்னு பழுவேட்டரையர் சொன்னார். கூட்டத்தில இருந்தவங்க சிலர்  மதுராந்தக தேவர் பத்தி கேள்வி பட்டத சொன்னாங்க. அதாவது இவர் பட்டம் வேண்டாம்னு சிவ பக்தியிலே கரைஞ்சு காணாம போயிட்டாரு-ன்னு. பழுவேட்டரையர் பல்லக்கில் இருக்கிற மதுராந்தக தேவர வெளியில வந்து தனக்கு ராஜ பதவி ஏதுக்கதுக்கு சம்மதமான்னு சொல்ல சொன்னாரு. அவரும் வந்து சொன்னாரு.

விளக்கம்: 
 "சோழ சாம்ராஜ்யம் ஆண்ட மன்னரான கண்டராதித்த தேவர் எதிபாராத விதமா இறக்கிற சூழ்நிலையில தான் மகன் மதுராந்த தேவர் ஒரு வயசு குழந்தைங்கிரதால தன் தம்பி அரிஞ்சய சோழருக்கு பட்டம் கட்டும் படி சொல்லிட்டு இறந்துட்டாரு. இந்த விஷயத்த சொன்னது கனடராதித்த தேவரோட மனைவி  பட்டது ராணி தான். விதி வசமா அரிஞ்சய தேவர் ஒரு வருஷம் கூட நீடிக்கல, இறந்து போயிட்டாரு. இதனால அவர் பையன் இருபது வயசான சுந்தர சோழருக்கு நாங்க பட்டம் கட்டினோம்." அப்படீன்னு சொன்னாரு பழுவேட்டரையர்.
  சம்புவரையர் சொன்னாரு "கண்டராதித்த தேவரோட பையன் மதுராந்தக தேவர் இப்போ பிராயத்திலே இருக்கார், அவர் பெரியவரா இருந்திருந்த அன்னிக்கே பட்டம் அவருக்கு போயிருக்கும். இப்போ அவருக்கு பட்டம் கொடுக்கறதே சரி" ன்னு சொன்னார்.
  கூட்டத்திலே யாரோ கேட்டாங்க " இப்போ மதுராந்தக தேவர் எங்க இருக்கார் ? ராஜ்ஜியம் ஆள ஆசை இல்லாம சிவ பக்தியிலே மூள்கிட்டாருன்னு  சொல்றாங்க. உண்மையிலேயே அவருக்கு ஆசை இருக்கா ?  இருக்குன்னாலும் அது எங்களுக்கு எப்படி தெரியும் ?"
   பழுவேட்டரையர் சொன்னாரு "தெரிஞ்சா ஆதரவு தருவீங்களா ? " எல்லாரும் சம்மதம் சொன்னாங்க. பழுவேட்டரையர் பல்லக்கு இருந்த திசைய பாத்து சொன்னாரு "இளவரசே பல்லக்கு திரைய விலக்கி எங்களுக்கு போஸ் கொடுங்க. உங்க சம்மதத்தை சொல்லுங்க"ன்னாரு. மதுராந்தக தேவர் வெளியே வந்தாரு. எல்லாரும் "பட்டத்து இளவரசர் வாழ்க ! மதுராந்தக சோழர் வாழ்க !!"  அப்படி கோஷம் போட்டாங்க.
   இதுக்கு மேல இங்க நிக்க முடியாதுன்னு வந்தியத் தேவன் அவன் இடத்துக்கு வந்து படுத்துக் கிட்டான், அப்படியே தூங்கி போனான் இவன்.
   
  

ஆண்டி செப்டிக்

   காயங்கள் செப்டிக் ஆவது ஒரு பெரிய மர்மமாக இருந்தது டாக்டர்களுக்கு. 1865 ஆம் ஆண்டு ஜோசப் லிஸ்டர் என்ற மருத்துவர் காயங்கள் திறந்து இருப்பதால் தான் செப்டிக் ஆகிறது என்று கண்டுபிடித்தார். பிரான்ஸ் நகர ரசாயன விஞ்ஞானி லூயிஸ் பாய்ச்ச்சர் திறந்த நிலையில் இருந்த மாமிசம் சீக்கிரம் அழுகி விடுவதையும், அதே மாமிசம் காற்றுபுக முடியாத கண்ணாடி குவளையில் வெகு நாள்கள் கெடாமல் இருப்பதையும் வைத்து, காற்றில் கண்ணுக்குத் தெரியாத நுன்னுயிர்கள் இருப்பதால் தான் இந்த மாற்றம் நிகழ்கிறது என்ற கண்டு பிடிப்பை வெளியிட்டார்.  
இந்த கண்டு பிடிப்பும் காயங்கள் அழுகுவதும் ஏறக்குறைய ஒன்றே என்று லிஸ்டர் எண்ணினார். தான் கிராமத்துக்கு அருகே சாக்கடை சுத்தம் செய்பவர்கள் கார்பாலிக் அமிலத்தை பயன்படுத்துவதை பார்த்தார். அந்த அமிலத்தால் காயங்களை சுத்தம் செய்ய ஆரம்பித்தார் லிஸ்டர். சாக்கடை சுத்தம் செய்வதை கொண்டு காயம் சுத்தம் செய்வது அவருக்கு வித்தியாசமாக தெரியவில்லை. இருந்தாலும் செப்டிக் ஆகும் நிலையில் இருந்த பல காயங்கள் நல்ல நிலைக்கு மாற ஆரம்பித்தன, முன்னேற்றம் ஏற்ப்பட்டன. இதுவும் ஒரு மிக சிறந்த கண்டுபிடிப்பே. அறுவை சிகிச்சை ஏற்படுத்தும் காயத்தையும் குணமாக்குவது சாத்தியமே என்ற நிலைக்கு மருத்துவ உலகம் முன்னேற ஆரம்பித்தது.

நன்றி - சித்தார்த்த முகர்ஜி

ஆத்திசூடி

ஆசான் ஔவையார்
1. ஆத்திசூடி
கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்

1. அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அஃகம் சுருக்கேல்.

உயிர்மெய் வருக்கம்

14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப் போல் வளை.
16. சனி நீராடு.
17. ஞயம்பட உரை.
18. இடம்பட வீடு எடேல்.
19. இணக்கம் அறிந்து இணங்கு.
20. தந்தை தாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர் செய்.
23. மண் பறித்து உண்ணேல்.
24. இயல்பு அலாதன செய்யேல்.
25. அரவம் ஆட்டேல்.
26. இலவம் பஞ்சில் துயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகு அலாதன செய்யேல்.
29. இளமையில் கல்.
30. அரனை மறவேல்.
31. அனந்தல் ஆடேல்.

ககர வருக்கம்
32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப்பட வாழ்.
35. கீழ்மை அகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்பது ஒழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்.
42. கோதாட்டு ஒழி.
43. கௌவை அகற்று.

சகர வருக்கம்
44. சக்கர நெறி நில்.
45. சான்றோர் இனத்து இரு.
46. சித்திரம் பேசேல்.
47. சீர்மை மறவேல்.
48. சுளிக்கச் சொல்லேல்.
49. சூது விரும்பேல்.
50. செய்வன திருந்தச் செய்.
51. சேரிடம் அறிந்து சேர்.
52. சையெனத் திரியேல்.
53. சொற் சோர்வு படேல்.
54. சோம்பித் திரியேல்.

தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி.
56. தானமது விரும்பு.
57. திருமாலுக்கு அடிமை செய்.
58. தீவினை அகற்று.
59. துன்பத்திற்கு இடம் கொடேல்.
60. தூக்கி வினை செய்.
61. தெய்வம் இகழேல்.
62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
63. தையல் சொல் கேளேல்.
64. தொன்மை மறவேல்.
65. தோற்பன தொடரேல்.

நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி.
67. நாடு ஒப்பன செய்.
68. நிலையில் பிரியேல்.
69. நீர் விளையாடேல்.
70. நுண்மை நுகரேல்.
71. நூல் பல கல்.
72. நெற்பயிர் விளைவு செய்.
73. நேர்பட ஒழுகு.
74. நைவினை நணுகேல்.
75. நொய்ய உரையேல்.
76. நோய்க்கு இடம் கொடேல்.


பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்.
78. பாம்பொடு பழகேல்.
79. பிழைபடச் சொல்லேல்.
80. பீடு பெற நில்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
82. பூமி திருத்தி உண்.
83. பெரியாரைத் துணைக் கொள்.
84. பேதைமை அகற்று.
85. பையலோடு இணங்கேல்.
86. பொருள்தனைப் போற்றி வாழ்.
87. போர்த் தொழில் புரியேல்.

மகர வருக்கம்
88. மனம் தடுமாறேல்.
89. மாற்றானுக்கு இடம் கொடேல்.
90. மிகைபடச் சொல்லேல்.
91. மீதூண் விரும்பேல்.
92. முனைமுகத்து நில்லேல்.
93. மூர்க்கரோடு இணங்கேல்.
94. மெல்லி நல்லாள் தோள்சேர்.
95. மேன்மக்கள் சொல் கேள்.
96. மை விழியார் மனை அகல்.
97. மொழிவது அற மொழி.
98. மோகத்தை முனி.

வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்.
100. வாது முற்கூறேல்.
101. வித்தை விரும்பு.
102. வீடு பெற நில்.
103. உத்தமனாய் இரு.
104. ஊருடன் கூடி வாழ்.
105. வெட்டெனப் பேசேல்.
106. வேண்டி வினை செயேல்.
107. வைகறைத் துயில் எழு.
108. ஒன்னாரைத் தேறேல்.
109. ஓரம் சொல்லேல்.


நன்றி "தமிழ் தந்த சித்தர்கள்" வலை தளம்.....

Wednesday, December 14, 2011

சென்னை அன்று - போக்குவரத்து நெருக்கடி (ட்ராபிக் ஜாம்)

மவுண்ட் ரோடு, ப்ளாக்கர் (Blaker )  ரோடு சந்திப்பு

சென்னை அன்று - எழும்பூர் சிக்னல்





சென்னை அன்று - மரினா கடற்கரை


சென்னை சேப்பாக்கம் அரண்மனை அன்றும் இன்றும்

1890 
இப்போது 



Tuesday, December 13, 2011

எண்ணெய் ஆலை

இந்தியாவுக்கு வந்த பிரான்சு நாட்டவரால் 1782 இல் வரையப் பட்டது. மௌலின்  ஹிலே என்றால் எண்ணெய் ஆலை என்று அர்த்தம். 


பொன்னியின் செல்வன் குரூப் போட்டோ


நடுவில் இருப்பவர் கல்கி 

மகாபாரதத்தில் இருந்து ஒரு குட்டிக் கதை

   
   மகாபாரதத்தின் கடைசீயில் தருமன் நடந்தே கைலாசம் நோக்கி  செல்கிறான். போகும் வழியில் நாய் ஒன்று அவனை பின் தொடருகிறது. அவன் ஓய்வு எடுக்கும் போது நிற்கிறது, நடந்தால் கூடவே நடக்கிறது. இப்படியாக இருவரும் நண்பர்கள் ஆகி விடுகிறார்கள். சில நாட்கள் ஆகி விட்டன. வானத்தில் இருந்து தங்கத் தேர் ஒன்று வந்து தருமன் முன் நிற்கிறது. அது தருமனை வானுலகத்துக்கு கூப்பிட்டு போக வந்திருக்கிறது. தருமன் அதில் ஏறுகிறான், நாயும் பின் தொடருகிறது. தேரோட்டி நாயை தேரில் ஏற்ற மறுத்து விடுகிறான், அவனுக்கு கிடைத்த உத்தரவு தருமனை ஏற்றிக்கொண்டு வரும்படி மட்டுமே. தருமனுக்கு என்ன சொல்ல என்று தெரியவில்லை, தேரை விட்டு இறங்கி விடுகிறான்.
  "ஐயா, ஒரு நாய்க்காக சொர்க்கத்தை விடுகிறீர்களா ?" என்று தேரோட்டி கேட்ட,
  "இந்த நாய் என்னுடைய நண்பன் இப்போது, கூடவே வருகிற நண்பனை விட்டு விட்டு செல்வது தருமம் அல்ல என்று தோன்றுகிறது" என்கிறான் தருமன்.
   அப்போது ஒரு அதிசயம் நடந்தது. நாய் இருந்த இடத்தில் தரும தேவதை நிற்கிறது. சொர்க்கம் கிடைக்கிற தருவாயிலும் தருமன் எப்படி நடக்கிறான் என்று பார்க்கவே இந்த பரீட்சையை வைத்தது என்று சொல்லி அவனை வாழ்த்தி சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்தது தரும தேவதை.
   எட்டுகிற தூரத்தில் சொர்க்கம் இருந்தாலும் தருமம் தவறவில்லை இந்த தருமர்.


Monday, December 12, 2011

மயக்க மருந்து




   1846 அக்டோபர் 16  - அமெரிக்காவில் மாசசுசட்ஸ் மாநிலத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் எட்வர்ட் அப்பாட் என்ற நோயாளிக்கு கழுத்தில் இருந்த கட்டியை புதுமையான முறையில் நீக்குவதாக கூறினார் மருத்துவர் வில்லியம் மார்டன். மருத்துவர்கள் பலரும், வேறு பலரும் கூடி பார்த்துக் கொண்டிருக்கையில், ஈத்தர் என்ற பொருள் நிரம்பிய கண்ணாடி குப்பியை கொடுத்து நன்கு மூச்சு இழுக்க சொன்னார் வில்லியம். சில முறை அப்படி செய்திருப்பார் எட்வர்ட், தன்னை மறந்த மயக்க நிலையை அடைந்தார் எட்வர்ட். சில சீக்கிர அசைவுகளில் கட்டியை நீக்கி தையல் போட்டார்  மருத்துவர்.
   சிகிச்சை முடிந்த பிறகு "வலி எதுவும் தெரியவில்லை, ஆனால் அறுவை சிகிச்சை நடக்கிறது என்பது தெரிந்து இருந்தது எனக்கு" என்று கூறினார் எட்வர்ட். மருத்துவ உலகில் அப்போதைக்கு அது ஒரு மிகப் பெரிய கண்டுபிடிப்பு. இதற்கு அப்பறம் பல மணி நேரம் நீடிக்கக் கூடிய அறுவை சிகிச்சை செய்ய முடிந்தது, பல்லாயிரக் கணக்கான உயிர்களை காப்பாற்ற முடிந்தது.
    ஆனாலும் கத்தி பட்ட இடத்தில் நோய் தோற்று ஏற்படுவது சகஜமாக இருந்தது. செப்டிக் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து உருவாக்கும் சூழ்நிலை இருந்தது.



Sunday, December 11, 2011

வாழ்த்து


சர்வதேச ஒரு நாள் கிரிகெட் போட்டியில் 219 ரன்கள் எடுத்த சேவாக்-குக்கு வாழ்த்து !

படித்ததில் பிடித்தது - ஜெயமோகன்

ரிஷி 'பிரஜாபதி பரமேஷ்டி' சிருஷ்டி பற்றிச் சொன்ன ரிக்வேதத்தின் சிருஷ்டிகீதம்  என்னும் மகத்தான பாடல்.

*
சிருஷ்டி கீதம்
===========

அப்போது அசத் இருக்கவில்லை
சத்தும் இருக்கவில்லை
உலகம் இருக்கவில்லை
அதற்கப்பால்
வானமும் இருக்கவில்லை



ஒளிந்துகிடந்தது என்ன?
எங்கே?
யாருடைய ஆட்சியில்?
அடியற்ற ஆழமுடையதும்
மகத்தானதுமான நீர்வெளியோ?
மரணமிருந்ததோ
மரணமற்ற நிரந்தரமோ?

அப்போது இரவுபகல்கள் இல்லை
ஒன்றேயான அது
தன் அகச்சக்தியினால்
மூச்சுவிட்டது
அதுவன்றி ஏதுமிருக்கவில்லை






இருட்டால் போர்த்தப்பட்ட வெளி
வேறுபடுத்தலின்மையால்
ஏதுமின்மையாக ஆகிய வெளி
அது நீராக இருந்தது
அதன் பிறப்பு
வெறுமையால் மூடப்பட்டிருந்தது!

தன் முடிவற்ற தவத்தால்
அது சத்தாக ஆகியது


அந்த ஒருமையில்
முதலில் இச்சை பிறந்தது
பின்னர் பீஜம் பிறந்தது
அவ்வாறாக அசத் உருவாயிற்று!


ரிஷிகள்
தங்கள் இதயங்களை சோதித்து
அசத்தில் சத்தைக் கண்டடைந்தனர்
அதன் கதிர்கள்
இருளில் பரந்தன


ஆனால் ஒருமையான அது
மேலே உள்ளதா?
அல்லது கீழே உள்ளதா?
அங்கு படைப்புசக்தி உண்டா?
அதன் மகிமைகள் என்ன?
அது முன்னால் உள்ளதா?
அல்லது பின்னால் உள்ளதா?

திட்டவட்டமாக யாரறிவார்?



அதன் மூலக்காரணம் என்ன?
தேவர்களோ
சிருஷ்டிக்குப் பின்னர் வந்தவர்கள்!
அப்படியானால் அது எப்படிப்பிறந்தது?
யாருக்குத்தெரியும் அது?


அதை யார் உண்டுபண்ணினார்கள்
அல்லது உண்டுபண்ணவில்லை?
ஆகாய வடிவான அதுவே அறியும்
அல்லது

அதுவும் அறியாது!

அறியவொண்ணாமையின் பிரமிப்பால் மட்டுமே சென்று தீண்டச்சாத்தியமான அந்த ஒன்றை இங்கே பெயர் சுட்டக்கூட கவிஞன் முயலவில்லை. மீண்டும் மீண்டும் பிரமிப்பின் வினாக்களே அதை நோக்கி நீள்கின்றன. 'வ்யோமன் த்ஸோ அங்க வேத யதி ! வா ந வேத!' என்று சொல்லிமுடிக்கும் கவித்துவ உச்சத்தில் அப்பிரமிப்பே ஒரு இருப்பாக மாறி தன்னை நிறுவிக்கோண்டுவிடுகிறது.
அந்தப்பிரமிப்புக்கு அளிக்கப்பட்ட ஒலியே 'பிரம்ம'  என்பது. 'அம்ம!' என்ற ஒலிக்கு நிகராதுதான் அது. பெரியது, ஆச்சரியத்துக்குரியது, அச்சம் தருவது என்றெல்லாம் பிரம்மம் என்னும் ஒலி பொருள்கொள்ளப்படுகிறது. என்றாலும் அது எப்போதும் அதையே குறிக்கிறது. அலகிலாதது, அறியமுடியாமை என்ற அறிவை மட்டுமே அளிப்பது, இருப்பது , இருப்பின்மையாலேயே இருப்பை அறிய முடியாதது.
அதைச்சொல்ல  நேதி நேதி நேதி என்று அனைத்தையும் மறுக்க வேண்டும். அல்லது ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம்  என்று அனைத்தையும் ஏற்கவேண்டும். தத்வமசி என்று வெளியே சுட்டவேண்டும் . அஹம்பிரம்மாஸ்மி என்று தன்னைச்சுட்டவேண்டும். முரண்பாடுகள் வழியாக மட்டுமே சொல்லமுடியும் ஒரு முடிவின்மை அது.


-- ஜெயமோகனுடைய வலை பூவில் இருந்து [jeyamohan.in]




Saturday, December 10, 2011

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் - குறுகிய பதிப்பு - பாகம் 1 - அத்தியாயம் 6 & 7 - சுருக்கம்



விருந்துக்கு வந்த பழுவேட்டரையர் மற்ற குறு நில ராஜாக்கள் கிட்ட "சுந்தர சோழ மகராஜா உடம்பு சரி இல்ல, ரொம்ப நாள் இருக்க மாட்டார். அவர் பையங்க ரெண்டு பெரும் சரி இல்ல ராஜ்யத்த ஆளரதுக்கு" அப்படீன்னு சொன்னாரு.


முதுகு வலியா ? மூவ் தடவும் முன் இதை படியுங்கள்


 
நாற்காலியில் நெடு நேரம் அமரக் கூடிய வேலை செய்பவரா நீங்கள் ? அப்படியானால் கண்டிப்பாக படியுங்கள் இதை.

 தூங்கப் போகும் போது சரியாகப் படுத்துக் கொள்வது எப்படி ? ஒருக்களித்து படுங்கள். தலை, கழுத்துக்கு ஆதரவாக தலையணை வையுங்கள். கால் முட்டுகளுக்கு நடுவிலும் தலையணை வைத்துக் கொள்ளலாம்


 படுக்கிற மெத்தை, இடம் அதன் கடினம் மிக முக்கியம். ரொம்ப மென்மையான மெத்தையும், ரொம்ப உறுதியான மெத்தையும் சரியானவை அல்ல. உங்களுக்கு ஏற்ற கடின/மெது மெத்தையை கண்டு பிடியுங்கள்.


 கீழ் முதுகு வலித்தால் இதை செய்யுங்கள். சரியான விதத்தில் கீழ் முதுகுக்கு ஆதரவு கொடுங்கள், படங்கள் கீழே


 நிற்கையில் முதுகை எப்படி வைத்துக் கொள்ளவது ? முதுகை வளைக்காதியுங்கள்


முதுகுக்கான உடற்பயிற்சி


 ஹீல்ஸ் செருப்புகள் வேண்டாம், உடற்பயிற்சி செய்யுங்கள்


 எப்படி மல்லாந்து படுக்க வேண்டும்? கால் முட்டிக்குக் கீழே தலையணையும், கீழ் முதுகுக்கு கீழே மெல்லிய தலையணையும் வைக்கலாம்.


 எப்படி உட்கார வேண்டும்?

கால் பாதம் தரையில் நன்கு பதிய வேண்டும்
கீழ் முதுகு நன்கு தாங்கப் பட்டிருக்க வேண்டும் 
தோள்கள் ரிலாக்சாக தாழ்ந்து இருக்க வேண்டும் 
கை மணிக்கட்டு நேராக இருக்க வேண்டும்


 வேறென்ன செய்யலாம் நிவாரனதிற்கு? 
வெந்நீர் ஒத்தடம் அல்லது மசாஜ்


 முதுகு வலி வராமல் தடுப்பது எப்படி?


 எப்படி வருகிறது இந்த வலி?
முதுகு எலும்பு கணுக்களை இணைக்கிற ஜவ்வு அடிபடும் போது  அல்லது 
ஒரு கணு கொஞ்சம் நகர்ந்து முதுகு தண்டை அழுத்தும் போது


 எப்படி தடுக்கலாம் ?
௧) இழுப்பதை விட கனமான எடையை தள்ளி செல்லுங்கள் 
௨) ஒரே இடத்தில் வெகு நேரம் இருக்காமல் எழுந்து சிறிது நேரம் நடங்கள் அல்லது நெளித்து கொடுங்கள்


 டாக்டரை உடனே பார்க்க வேண்டியது எப்பண்ணா:
முட்டிக்கு கீழ வலி பரவும் போது
இடுப்புக்கு கீழ மரத்துப் போகும் போது 
கழிப்பதில் உங்கள் கண்ட்ரோல் இல்லாமல் போனால் 
வலி இரண்டு மூன்று நாள்களுக்கு மேல இருந்தால்
தாங்க முடியாத வலி இருக்கும் போது
அடி பட்டு இந்த வலி வந்து இருந்தால் 


 எடையுள்ள பொருள்கள தூக்கும் போது முதுகில பிடிக்காம தூக்கணும். இடது பக்கம் உள்ளது தவறான முறை வலது பக்கம் சரியான முறை

 
தகவல் உதவி : கவிதா ஆறுமுகம்